மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்பட்ட சபரிமலை கோயில்!

மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்பட்ட சபரிமலை கோயில்...
மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்பட்ட சபரிமலை கோயில்!
Updated on
1 min read

பத்தனம்திட்டா : சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை செவ்வாய்க்கிழமை (டிச. 30) மாலை மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலையில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெற்ற பின், அதனைத்தொடர்ந்து, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இந்தநிலையில், இன்று (டிச. 30) மாலை 5 மணிக்கு கோயில் தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி இ. டி. பிரசாத் திருநடையைத் திறந்தார். ஆண்டிறுதி நாளான புதன்கிழமை (டிச. 31) அதிகாலை 3 மணிக்கு மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட உள்ளன.

சன்னிதானத்திலுள்ள ஆழி பற்ற வைக்கப்பட்ட பின்னர், இருமுடி கட்டி வருகை தந்துள்ள பக்தர்கள் பதினெட்டாம்படி வழியாக மேலேறி ஐயப்ப சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலை நிகழாண்டு மண்டல பூஜையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் இதர வருவாய் மூலம் சபரிமலை தேவஸ்தானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை(டிச. 27) மாலை நிலவரப்படி, ரூ. 332.77 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் வரும் ஜன. 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Summary

Sabarimala temple opened for the annual makaravilakku festival on Tuesday evening.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com