செப்பறை அழகிய கூத்தர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயிலில் ஆனி மாத தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
azhagiya Koothar Temple procession
அழகிய கூத்தர் கோயில் தேரோட்டம்
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவிலில் ஆனி மாத தேரோட்ட திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. உலகில் முதல் நடராஜர் மூர்த்தி கோயில் கொண்டுள்ள செப்பறை திருத்தலமானது தாமிரபரணி தீர்த்தமாகக் கொண்டு பஞ்ச சபைகளில் முக்கியமான தாமிரபரணி சபையாக விளங்குகிறது.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆனி மாதமும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த 23ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Summary

The azhagiya Koothar Temple procession in Sepparai: A large number of devotees participate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com