ஆனித் திருமஞ்சனம்: தஞ்சை பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!

தஞ்சை பெரிய கோயிலில் ஆனி உத்திரம் சிறப்பு விழா...
நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
Published on
Updated on
1 min read

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆனித் திருமஞ்சனம் ஸ்ரீ நடராஜருக்கு உரிய அற்புதமான நாள், சிவன் கோவிலில் அனைத்து தலங்களிலும் ஆனி திருமஞ்சனம் முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது, நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் திருக்கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் நடராஜப் பெருமானுக்கு விபூதி, திரவியப்பொடி, மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர் மற்றும் சந்தனம் ஆகிய அபிஷேக பொருள்களால் சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Summary

A special abhishekam was performed for Lord Nataraja on the occasion of Ani Thirumanjanam at the world-famous Thanjavur Big Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com