weekly predictions
வார பலன்கள்

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 04 - 10) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வாக்குறுதிகளை அளிக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். எதிரிகள் தானாகவே விலகிவிடுவார்கள். முக்கிய முடிவுகளில் அனுபவ அறிவு உதவும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்பு களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நேர்மையான உழைப்பை மூலதனமாக்குவீர்கள். விவசாயிகள் அதிகமாக உழைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினருக்குப் பணவரவு உண்டு. பெண்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 7, 8.

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பொது காரியங்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நம்பிக்கைகள் மேம்படும். குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்போர் உதவுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் இன்முகத்தோடு இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பிறரை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினரின் பொருளாதாரம் மேம்படும். பெண்கள் மழலைப் பாக்கியம் உண்டாகக் காண்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 9, 10.

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் மேன்மை உண்டாகும். வெளித்தொடர்புகள் விரிவடையும். விலகிச் சென்றவர்கள் குடும்பத்தோடு இணைவார்கள். முயற்சிகளில் தடைகள் விலகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் உண்டாகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் வீண், வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கலைத் துறையினரின் திறமைகள் ஒளிரும். பெண்கள் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேசவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வேகத்துடன் விவேகத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். தொழிலில் பிரச்னைகள் குறையும். தேவைக்கேற்ப வருமானம் கிடைக்கும். மனக் குழப்பங்கள் மறையும்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் கடன்களை அடைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தைக் கவருவீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். பெண்கள் கணவருடன் அன்போடு இருப்பீர்கள். மாணவர்கள் பிறருடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வழக்குகளில் தாமதம் குறையும். புதியவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் கெடுபிடிகளால் சோர்வடைவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கவும். விவசாயிகள் கால்நடைகளுக்குச் செலவழிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுவீர்கள். கலைத் துறையினர் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் உடன்பிறந்தோரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

மனதில் தெளிவு பிறக்கும். எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரிகள் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். விவசாயிகளின் திறமைகள் வெளிப்படும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பீர்கள். கலைத் துறையினருக்கு விருதுகள் தேடி வரும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தைக் கவனிப்பீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினரிடம் அன்னியோன்யம் அதிகரிக்கும். புதிய கடன்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடமும், தொண்டர்களும் ஆதரவாய் இருப்பார்கள். கலைத் துறையினரிடம் பிரிந்து சென்றவர்கள் தேடி வருவார்கள். பெண்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தினரிடம் பக்குவமாக நடப்பீர்கள். மன மாற்றம் ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். விவசாயிகளுக்குச் செயல்களில் வடிவம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் குறையும். கலைத் துறையினரின் பயணங்கள் அதிகரிக்கும். பெண்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டு. மாணவர்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்வீர்கள். திறமையான செயல்பாடுகளால் மதிப்பு உயரும். உடன் பிறந்தோர் அனுகூலமாக இருப்பார்கள். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மனக்கசப்புகள் மாறும். வியாபாரிகளுக்குப் புதிய பாதை புலப்படும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் பணிகளைத் திட்டமிட்டு செய்வீர்கள். கலைத் துறையினர் சக கலைஞர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்கள் நினைத்தவை நடந்தேறும். மாணவர்களின் பிரச்னைகள் தீரும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலைச் சீராக நடத்துவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வரவு அதிகரிக்கும். குடும்பத்தினரை ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரகசியங்களைப் பகிர வேண்டாம். வியாபாரிகள் சமுதாயத்தில் நல்ல நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். விவசாயிகள் குத்தகை நிலங்களை மீட்டெடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொருளாதார நிலை சீராகும். கலைத் துறையினர் புதிய பொறுப்புகள் தேடி வரும். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடிவரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் விருத்தியாகும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் வீண்வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். கலைத் துறையினருக்குப் பேச்சில் நிதானம் தேவை. பெண்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் கடுமையாக உழைப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் செயல்களை தன்னம்பிக்கை, சுறுசுறுப்புடன் முடிப்பீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்கும். வியாபாரிகள் புதிய வியாபாரம் செய்ய முனைவீர்கள். விவசாயிகள் விவசாயத்தை நவீனமயமாக்குவீர்கள்.

அரசியல்வாதிகளின் பொருளாதார நிலைமை ஏற்றமாக இருக்கும். கலைத் துறையினருக்கு அதிகாரப் பதவி தேடி வரும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்வீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 4, 5,6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com