
சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய சாரங்கபாணி சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவியைப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் திருவரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது திருத்தலமாக விளங்குவது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தினை ஏழு ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்துள்ளனர். புகழ்பெற்ற இவ்வலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரைத் திருவிழா.
இங்கு சித்திரைத் திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் சாரங்கபாணி சுவாமி மற்றும் ஸ்ரீதேவி ,பூமிதேவி ஆகியோர் பக்தர்களுக்குச் சேவை சாதித்தனர். தேரினை ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.