

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவிற்கான முதல் கட்ட பந்தக்கால் நடும் பணி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் மண் ஸ்தலமான ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் ரூ. 28 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதற்கான பந்தக்கால் நடும் பணி இன்று காலை திருக்கோயில் வளாகத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் செயல் அலுவலர், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பந்தக்கால் நிகழ்விற்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு திருக்கோயிலை வளம் வந்து திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு சிறப்பு தீப ஆராதனைகளுக்குப் பின்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் விரைவாக நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.