

பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் 15 லட்சம் மதிப்புள்ள புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மகாமகம் தொடர்புடைய 12 சைவத் திருத்தலங்களில் முதன்மையானதாகப் போற்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரசவாமி திருக்கோயிலாகும். இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
தற்போது இக்கோயிலுக்கு வருகிற டிசம்பர் 01ம் தேதி திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, இக்கோயிலில் இருந்த பழைய கொடிமரத்திற்கு அகற்றப்பட்டு, சேலத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் கண்ணகி குடும்பத்தினரின் நன்கொடை ரூ. 15 லட்சத்தில், கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய மரத்தில் 48 உயரமும், 2.25 அடி விட்டத்தில் கீழ்பாகம் 6 அடி விட்டத்திலும் உருவாக்கப்பட்டு அதற்கான பிரதிஷ்டை இன்று உத்திரட்டாதி நட்சத்திரம், திரயோதசி திதி, கொடிமரத்திற்கு விசேஷ அபிஷேகம் செய்தும், சிறப்புப் பூஜைகள் செய்தும் புதிய கொடிமர நிர்மான பணி நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தற்போது கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகளுக்கான கொட்டகை அமைக்கும் பணி, கோயில் வளாகத்தில் புதிய வர்ணம் தீட்டும் பணி, ஓவியம் வரையும் எனப் பணி எனப் பல கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்றது. வருகிற டிசம்பர் 01ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.