

108 வைணவ தலங்களில் ஒன்றான வீர நரசிம்மர் ஆலய குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் வீர நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த சில வருடங்களாகக் கோயில் புனரமைப்பு செய்யும் பணிகள் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று நிறைவு பெற்றது.
அதனைத்தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டாச்சார்யர்கள் வேத மந்திரங்கள் முழுங்க கலசத்திற்குப் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டு கோபுர தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.