காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ரத்ன அங்கி சேவை!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ தாத தேசிகன் சாற்று முறை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ரத்ன அங்கி சேவையில் வரதராஜ பெருமாள்
ரத்ன அங்கி சேவையில் வரதராஜ பெருமாள்
Published on
Updated on
1 min read

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ தாத தேசிகன் சாற்று முறை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விஜயநகர பேரரசின் ராஜ குருவாக விளங்கியவரும், காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் ஆதிகால தர்மகத்தாவாக இருந்த ஸ்ரீதாத தேசிகனின் சேவையைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நட்சத்திரத்தில் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி அணிந்து ஸ்ரீதாத தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம்.

அதன்படி, ஸ்ரீ தாத தேசிகன் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத்தை ஓட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் இன்று நவரத்தினங்களால் ஆன அங்கி அணிந்து பன்னீர் ரோஜா பூ மலர் மாலை சூடி, ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், டமாரம் மேளம், ஒலிக்க தவில்,நாதஸ்வர, வாத்தியங்கள் இசைக்கக் கோயில் வளாகத்தில் உலா வந்து ஸ்ரீ தாத தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். பின்னர் வேத பாராயணம் மந்திரங்கள் ஒலிக்க பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், அணிந்து வந்த ரோஜா பூ மாலைகளை வழங்கி ஸ்ரீ தாத தேசிகனுக்கு  அணிவித்து சிறப்பு செய்தார்.

தாத தேதிகன் சாற்று முறை உற்சவத்தில் நவரத்தினங்கள் பதித்த ரத்தின அங்கியில் வரதராஜ பெருமாள் சேவை சாதிக்கும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வரதராஜ பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

Summary

The Sri Dada Desikan Chatru Utsavam was held with great enthusiasm at the Varadaraja Perumal Temple in Kanchipuram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com