ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொக்கப்பனை முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை முகூர்த்தக்கால் பற்றி..
srirangam
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி
Updated on
1 min read

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஸ்வாமி திருக்கோவில் சொக்கப்பனை நிகழ்வுக்காக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி அன்று சொக்கப்பனை கொளுத்தப்படும் அதற்காக இன்றைய தினம் கோயில் வளாகத்தில் இருக்கும் கார்த்திகை கோபுரம் வாயில் முன்பாக சொக்கப்பனை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சுமார் 20 அடி உயரம் கொண்ட தென்னைமரத்தின் நுனியில் மாலை, சந்தனம், மாஇலை உள்ளிட்ட மங்களப்பொருள்கள் கட்டப்பட்டு அர்ச்சகர்களால் வேதமந்திரங்கள் முழங்கிட புனிதநீர் தெளிக்கப்பட்டது.

பின்னர், மேளதாளம் முழங்க முகூர்த்தக் கால் நடப்பட்டது. அப்போது கோயில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி அதற்கு மரியாதை செலுத்தியது.

கார்த்திகை தீபத்திருநாள் அன்று நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளிக் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Summary

On the occasion of Karthigai Deepam, a Mukhurthakaal planting ceremony was held for the Sokkappanai event at Srirangam Aranganathar Swamy Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com