வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
weekly predictions
வார பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவ. 28 - டிச. 4) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். உடல் உபாதைகள் நீங்கும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் வேலைத்திறன் அதிகரிக்கும். வியாபாரிகள் துணிந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்குக் கட்சிப்பணிகளில் வெற்றி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கூடத் தொடங்கும். பெண்களுக்குப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் படிப்பில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உற்றார் - உறவினர், நண்பர்களுடன் உறவு மேம்படும். பூர்விகச் சொத்தில் வில்லங்கங்கள் நீங்கி, உங்கள் பங்கு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் சிந்தித்துக் கட்சிப்பணிகளைச் செய்து முடித்துவிடுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள், குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வருமானம் சிறப்பாகவே இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைகளை திறம்படச் செய்து முடிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கடினமான வேலைகளையும் கவனமாகச் செய்து முடித்துவிடுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களையும் தங்கள் வசப்படுத்திக்கொள்வீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிறையும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் சுலபமாக முடியும். விவசாயிகள் புதிய மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். பெண்கள் கணவருடன் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்களின் தன்னம்பிக்கை கூடும்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 28, 29.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பழைய தொழிலை மறுபடியும் நடத்த முற்படுவீர்கள். வழிபாடுகளிலும் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் அலைச்சல் இல்லாமல் வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகள் கொள்முதல் விற்பனையில் வருமானத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் பழைய குத்தகைப் பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள். பெண்கள் குடும்பப் பொறுப்புகளை நல்ல முறையில் நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 30, டிசம்பர் 1.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நண்பர்கள் தக்க நேரத்தில் உதவி செய்வீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் தானாகவே விலகிவிடும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் புதிய குத்தகைகளைத் தேடிப்பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் குறையும். மாணவர்கள் சக மாணவர்களுடன் சேர்ந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 2, 3.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

நண்பர்கள் தக்க நேரத்தில் உதவி செய்வீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் தானாகவே விலகிவிடும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் புதிய குத்தகைகளைத் தேடிப்பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் குறையும். மாணவர்கள் சக மாணவர்களுடன் சேர்ந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 2, 3.

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உற்றார் உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்துமுடிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய உத்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் புழு, பூச்சிகளின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லை இருக்காது. கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

மாணவர்கள் பெற்றோரின் சொல்கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடன்பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அதிக இணக்கம் காட்ட வேண்டாம். வியாபாரிகள் கடன்களை வசூலிப்பீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தால் வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் புதிய யுத்திகளைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் சமாதானப் போக்கைக் கடைப்பிடிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். உடல் நலனும் மனநலனும் நன்றாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் புதிய நண்பர்களை கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொள்வீர்கள். விவசாயிகள் ஊடு பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் சொன்ன சொல் தவறமாட்டீர்கள். கலைத்துறையினர் துறையில் சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்கள் புகழ், அந்தஸ்து கூடும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைக் குறைப்பீர்கள். வியாபாரிகள் வண்டி வாகனங்களுக்குப் பராமரிப்புச் செலவு செய்யநேரிடும். விவசாயிகளுக்கு கொள்முதல் விஷயங்கள் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து கடமையாற்றுவீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் தங்கள் குடும்பத்தில் மகப்பேறு உண்டாகக் காண்பீர்கள். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து சாதனை செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பல வழிகளில் வருமானத்தைப் பெறுவீர்கள். பயணங்களாலும் நன்மை உண்டாகும். செயற்கரிய செயல்களைச் செய்துமுடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் சிறிது செலவு செய்து கடையை அழகுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு பூச்சிகளின் தொல்லை இராது.

அரசியல்வாதிகள் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் துறையில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். மாணவர்கள் புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com