மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

மருதமலை சுப்பிரமணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!
Published on
Updated on
1 min read

மருதமலை சுப்பிரமணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

கோவை அருகே மருதமலை சுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. முருகப்பெருமானின் ஏழாவது படை வீடு என பக்தர்களால் போற்றப்படும் இந்த கோயிலில் கந்த சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்கள் சிவாச்சாரியார்கள் காப்பு கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, யாகசாலை பூஜை தொடங்கும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி - தெய்வானை சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, தீபாராதனை, திருவீதி உலா நடைபெறுகிறது.

தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி வரை காலையில், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27ஆம் தேதி நடக்கிறது. அன்று காலை 6:30 மணி முதல் 7 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமி சண்முகார் சாலை, மாலை 3 மணிக்கு முருகப்பெருமான் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, சூரசம்காரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் முருகப்பெருமாள் தரகாசுரன், பானுகோபன், சிங்கமுக சூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்கிறார். தொடர்ந்து முருக பெருமானின் கோபத்தை தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மேலும் புஷ்ப பல்லாக்கில் வள்ளி - தெய்வானை உடன் வீதி உலாவும், வருகிறார். மறுநாள் சுப்ரமணியசாமி வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து புஷ்ப பல்லாக்கில் சுப்பிரமணியசாமி திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Summary

The Kanda Sashti festival began with pomp and show today at the Maruthamala Subramani Swamy Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com