
2025 ஆண்டின் முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) நிகழ உள்ளதாக தினமணியின் இணையதள ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார்.
ஜோதிட ரீதியாக ராகு அல்லது கேதுவின் பாகையின் சூரியன்-சந்திரன் இணையும்போது சூரிய கிரகணமும், சூரியன் சந்திரன் நேர்கோட்டில் பயணிக்கும்போது ராகுவையோ அல்லது கேதுவையோ தொடும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
சந்திர கிரகணம் எப்போது தொடங்குகிறது?
ஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருஷம், ஆவணி மாதம் 22-ஆம் தேதி (07.09.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணி நள்ளிரவு 1.26 மணி வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இந்திய நேரப்படி இரவு 9.56 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் இரவு 10.59 மணியளவில் தொடங்குகிறது. கிரகண மத்யம நேரம் இரவு 11.41 மணியாகும் முழு சந்திர கிரகணமும் நள்ளிரவு 12.23-க்கும், கிரகணம் முழுவதுமாக நள்ளிரவு 1.26 மணிக்கு நிறைவடைகிறது.
பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்
சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம்
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் கிரகண தோஷமுள்ளவர்கள் பரிகாரம் சாந்தி செய்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.