
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் அருள்மிகு எட்டடி முத்துசுவாமி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடந்த 24-ம் தேதி சுவாமி குடி அழைத்தல், காப்பு கட்டுதல், நிகழ்ச்சியோடு தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல் ஸ்ரீ செல்லியம்மனுக்கு குடிய அழைத்தல் உருளுதண்டம், மாவிளக்கு, அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற முடிந்த நிலையில் அம்மன் திருத்தேர் விழாவானது விமர்சையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாரதணை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் அப்பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்
இந்நிகழ்ச்சியில் தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.