பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

61 அடி உயர பீலிக்கான் முனீஸ்வரர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், திரளானோர் தரிசனம்..
Kumbabhishekam
பீலிக்கான் முனீஸ்வரர்
Published on
Updated on
1 min read

தஞ்சாவூரில் 61 அடி உயரத்திலான அருள்மிகு பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் விளார் சாலையில் 61 அடி உயரத்தில் அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது‌. வலது கையில் 25 அடி உயரத்திலான அருவாளைப் பிடித்து இருப்பதுபோன்று மிகப் பிரம்மாண்ட சிலை நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு கடந்த 2 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது‌. அதனை தொடர்ந்து முனீஸ்வருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து முனீஸ்வரர் சிலைக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கூடி நின்று முனீஸ்வரா என்று பக்தி முழக்கமிட்டு கும்பாபிஷேகத்தைக் கண்டு வழிபட்டனர்.

Summary

The consecration ceremony of the Beelikaan Muneeswarar Temple was held with great pomp and circumstance. A large number of devotees participated in it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com