
கும்பகோணத்தில் பெய்த மழையினால் உலக புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் மழை நீர் சூழ்ந்ததால் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அவதியடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உலகப் புகழ் பெற்ற ஐராவதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய கலாசார மரபு சின்னமாக ஏற்கப்பட்டுள்ளது. சோழர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஆலயத்தில் கனமழை பெய்யும் பொழுது மழை நீர் கோயிலுக்குள் புகுவது தொடர் கதையாக உள்ளது.
நேற்றிரவு பெய்த கன மழையினால் இந்த ஆலயத்தின் நந்தி மண்டபம் பிரதான ஆலயத்தின் தென் பிரகாரம் ஆகியவை மழைநீர் சூழ்ந்துள்ளது. மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தேங்கும் தண்ணீரை விரைவாக வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கெனவே இங்குப் பயன்பாட்டில் உள்ள மின் மோட்டார்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் மழை நீர் அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகும், எனவே மழைநீர் வெளியேற்ற உரிய நிரந்தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தாராசுரம் பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.