உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றம்!

உப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
Purattasi Brahmotsavam at Uppiliyappan Temple
புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றம்
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே அமைந்துள்ள உப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் தமிழக திருப்பதி - தென்னக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் நின்ற கோலத்தில், ஒரே தாயாரான பூமி தேவியுடன் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

பொய்கையாழ்வார், பேயாழ்வார் திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது இத்தலம். இங்கு மூலவர் பெருமாளுக்கு எப்போதும் உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. தமிழக வைணவ தலங்களில் முதன் முதலில் இங்கு மட்டுமே துலாபாரம் அமைக்கப்பட்டது என்பதும், திருமலை திருப்பதியைப் போலவே தமிழகத்தில் இந்த வைணவ தலத்தில் தான் புரட்டாசி பிரமோற்சவம் நடைபெறுகிறது. என்பது சிறப்பு.

இத்தகைய பெருமைக்குரிய இந்த வைணவ தலத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா பத்து நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை உற்சவர் பெருமாளான பொன்னப்பர் பூமிதேவி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்புப் பூஜைகள் செய்து கருடாழ்வார் வரைந்த கொடியினை ஹஸ்த நட்சத்திரம், கன்னியா லக்னத்தில் ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் தீபாராதனைகள் காட்டப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு 27ம் தேதி வெள்ளி கருட வாகனத்தில் பெருமாளும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் தாயாரும் திருவீதி உலா நடைபெறுகிறது.

Summary

The festival began with the hoisting of the Purattasi Brahmotsavam flag at the Uppiliyappan Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com