காஞ்சிபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்!

நவராத்திரி விழாவையொட்டி புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சனிக்கிழமை சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
Kanchipuram Sri Mariamman
ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் கணேஷ் நகரில் அமைந்துள்ள தும்பவனம் மாரியம்மனுக்கு நவராத்திரி விழாவையொட்டி புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சனிக்கிழமை சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது வார்டு பகுதி கணேஷ் நகரில் அமைந்துள்ளது தும்பவனம் மாரியம்மன் கோயில். நவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலில் தினசரி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

நவராத்திரி விழாவினையொட்டி சனிக்கிழமை காலையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் மாரியம்மன் ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200 புதிய ரூபாய் நோட்டுக்களால் மகாலட்சுமியாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற உள்ளது.

Summary

Special Deepavalis were held on Saturday at the Tumbavanam Mariamman temple, decorated with new rupee notes, on the occasion of the Navaratri festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com