ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம் எதுவென்று தெரிந்துகொள்வோம்.
 Ayudha Puja
சரஸ்வதி பூஜை
Published on
Updated on
1 min read

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் இணையதள ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார்.

கல்விக்கு அதிபதியும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளை வைத்து சரஸ்வதி தேவியை பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளாகும்.

உடல் வலிமையின் சக்தியாக துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைத் தரவல்ல சக்தியாக மகாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள்பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி.

முதல் மூன்று நாள்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாகத் தோன்றி, மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. நவராத்திரியின் ஒன்பது தினங்களை அடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

வீடு, கல்விக் கூடங்கள், தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையைப் பொதுமக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்

சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்

புரட்டாசி 15 - அக்டோபர் 1, 2025 (புதன் கிழமை)

காலை 9.00 - 10.00

மதியம் 1.30 - 3.00

மாலை 4.00 - 5.00

இரவு 7.00 - 10.00

விஜயதசமி மற்றும் மறு பூஜை செய்ய உகந்த நேரம்

புரட்டாசி 16 - அக்டோபர் 2, 2025 (வியாழக்கிழமை)

காலை 9.00 - 10.30

மதியம் 1.00 - 1.30

மாலை 4.30 - 7.00

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com