இரண்டாம் குலோத்தங்களின் குழப்பத்தைத் தீர்த்ததாக வரலாறு கூறப்படும் உத்திரமேரூர் ஸ்ரீ பிரமஹரநாயகி உடனுறை ஸ்ரீ குழம்பேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடங்கியது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல்வேறு திருக்கோயில்கள் சிறப்புப் பெற்று வரும் நிலையில், சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்படும் உத்திரமேரூர் பகுதியில் சுமார் கிபி 1133-1150 காலத்தில் இரண்டாம் குழுக்களின் குழப்பத்தைத் தீர்த்தாக வரலாறு கூறும் நிலையில், அங்கு மேற்கு நோக்கி ஆலயமாக அமைந்த ஸ்ரீ குழம்பேஸ்வரர் ஆலயத்தின் திருப்பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று தற்போது நிறைவு பெற்றது.
இந்த நிலையில், இத்திருக்கோயிலுடன் ஸ்ரீ சக்தி விநாயகர் கங்கை அம்மன் ஆலயங்களும் திருப்பணி நடைபெற்றது. இதன் மகாகும்பாபிஷேக விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நேற்று இரவு தொடங்கியது. நவாகினி மற்றும் ஐந்து யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு முப்பதுக்கு மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை மங்களை இசையுடன் தொடங்கியது.
இன்றும் நாளையும் தொடர்ந்து யாகசாலையில் பூஜைகள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு விநாயகர் கங்கையம்மன் ஆலயத்திற்கும், அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் பிரம்மஹரி நாயகியாக விளங்கும் திருபுவன நாயகி உடனுறை ஸ்ரீ குழம்பேஸ்வரர் மூலவர் கோபுர விமானத்திற்கு உள்பட அனைத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் வளாகத்தில் நாட்டிய இசை அஞ்சலி மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு கோயில் புனரமைக்கும்போது தங்கக் காசுகள் கிடைத்ததும் அதனை அரசு ஏற்றுக்கொண்டதும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது இந்த கோயில்.
Summary
The Mahakumbhabhishekam Yagashala puja has commenced at the Sri Kulambeshwarar Temple, along with Sri Brahmaharanayaki, in Uthiramerur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










