திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று(பிப். 10) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, கொடிப் பட்டமானது கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று, கோயிலுக்கு வந்து காலை 5.30 மணிக்கு காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார்.
அதன் பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், மணியம் நெல்லையப்பன், ஆறுமுகராஜ் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவு நாளான பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற பிப். 19 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
Summary
Masi festival at the Veyulukandamman Temple, which is affiliated with the Subramania Swamy Temple in Tiruchendur, began this morning (Feb. 10) with the flag hoisting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் கோயிலில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடக்கம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



