மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 125ம் ஆண்டு திருவிழா!

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் தனலட்சுமி அலங்காரம் பற்றி..
பகவதி அம்மன்
பகவதி அம்மன்
Updated on
1 min read

பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூர் ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோயில் 125ம் ஆண்டு திருவிழா. "தனலட்சுமி அலங்காரம்" திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வணிக வைசியர் சங்கம் சார்பில் 125ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான எட்டாம் நாள் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களால் ஆன "தனலட்சுமி அலங்காரம் " நடைபெற்றது.

 ரூ. 1, ரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200, ரூ. 500-நோட்டுகளால் மற்றும் நாணயங்களால் நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டும், தோரணமாகவும் வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு அபிஷேக மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.

தனலட்சுமி அலங்காரத்தில் பகவதி அம்மன் காட்சியளிப்பதால் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Summary

The 125th annual festival of the renowned Sri Bhagavathi Amman Temple in Mannachanallur. Devotees witnessed the "Dhanalakshmi decoration" with great devotion and reverence.

பகவதி அம்மன்
வருடத்தின் முதல் வாரம்: எப்படி இருக்கப்போகிறது? (மேஷம் - மீனம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com