Enable Javscript for better performance
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் - மினி தொடர்மருவத்தூர் ஆலயம்- Dinamani

சுடச்சுட

  

  ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் - மினி தொடர் - பகுதி 2 - மருவத்தூர் ஆலயம்

  Published on : 22nd February 2019 10:06 AM  |   அ+அ அ-   |    |  

  Maruvathur__1_

  பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, இவை  அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள்  இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும்  பெற்றார்கள்

  அதில் வடமேற்கு திக்கான வாயு திசையில் வாயு தேவனால் அமைக்கப்பட்டு பூசிக்கப்பட்ட லிங்கம் தான் இந்த மருவத்தூரில் கோயில்கொண்டிருக்கும் கைலாசநாதர்.

  மருக்கம், மாருதம்   எனும் சொல்லுக்கு காற்று எனும் ஒரு பொருள் உண்டு. இதிலிருந்து திரிந்து வந்த ஒரு இடவாகுபெயரே மருவத்தூர் என்பதாகும். இறைவன் பெயர் கைலாசநாதர் என்பது பிற்காலத்தில் சோழர் திருப்பணியில் மாற்றப்பட்ட பெயராக இருக்கலாம். இவரின்  பழைய பெயர் மாருதீஸ்வரர் என்பதாக இருந்திருக்கலாம்.

  கும்பகோணம் அருகில் உள்ள ஆவூர் – அவளிவநல்லூர் சாலையில் உள்ள விளத்தூர்-ல் இருந்து கிழக்கில் இரண்டு கிமி தூரத்திலும், ஹரித்துவாரமங்கலத்தில் இருந்து வடக்கில் மூன்று கிமி தூரத்திலும் உள்ளது மருவத்தூர். ஊரின் கிழக்கு பகுதியில் பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய பெரிய கோயிலாக உள்ளது சிவன்கோயில்.

  இங்கு ஓர் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து வாயு பகவான் வழிபட்டுள்ளார். இக்கோயில் 12 ம் நூற்றாண்டினை சார்ந்தது, அதிட்டானம் பிரஸ்தரம் வரை கருங்கல் பணியாக உள்ளது. கருவறை மூன்று கோட்டங்களை கொண்டதாக அமைந்துள்ளது. மூன்றிலும் மூர்த்திகள் உள்ளனர். இறைவி தெற்கு நோக்கி பெரியநாயகி எனும் பெயருடன் அருள்தரும் கோலம்.

  வாயு பூசித்த இந்த தல இறைவனை புதன் அன்று காலை நேரத்தில் பூசித்தால் காற்று தொடர்பான காச நோய் மற்றும் நுரையீரல், இதய நோய்கள் நீங்க பெறலாம்.

  ஏழாம் நூற்றாண்டில் சம்பந்த பெருமான் தல யாத்திரையாக அரித்துவாரமங்கலம் செல்லும்போது இவ்வூர் இறைவனை வழிபட்டார் என கூறுகின்றனர், எனினும் பதிகங்கள் ஏதும் கிடைக்கபரவில்லை

  ராஜராஜ சோழனின் திருமந்திர ஓலை நாயகம் அமுதன் தீர்தங்கரானாலும், அதிராஜேந்திரனின் புறவரி தினைக்களத்து கண்காணிக்கையாக இருந்த நமிநாதன் அரங்கனாலும் கொடைகொடுக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு பெற்ற திருக்கோயில் ஆகும்.

  தற்போது கோயில் பாலாலயம் எனப்படும் திருப்பணி துவக்க விழா நடைபெற்று பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்க்கு முன்னர் அறுபது ஆண்டுகளின் முன்னர் கோயில் குடமுழுக்கு கண்டிருக்கிறது. முகப்பு மண்டபம் இடிந்து போய்விட தற்போது முழுமையாக பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

  வேலூர் நடராஜ சுவாமிகள் இதற்க்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உள்ளூர் மக்களும் தங்களுக்கான பங்களிப்பினை செய்து வருகின்றனர். , எனினும் இது விவசாய பகுதியாதலால் பெரிய அளவில் அவர்களால் கொடுக்க இயலாத நிலையில் குடமுழுக்கு வரும்   விளம்பி வருடம் –

  பங்குனி 27 ஏப்ரல்  10  புதன் கிழமை நடைபெற தேதி குறிக்கப்பட்டு  உள்ளது. பணிகள் தொய்வடைந்துள்ள நிலையில் கிராம மக்கள் உங்கள் அனைவரின் பங்களிப்பினை எதிர்பார்க்கின்றனர். குறைவான தொகையே ஆயினும் கொடுத்து வாழ்த்துவோம். 

  கடம்பூர் விஜயன் - 9842676797

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai