மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 122 போ் கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மின்சாரத் திருத்தச் சட்டம் 2020ஐ ரத்து செய்ய வேண்டும், தொழிலாளா் நலனுக்கு எதிராக திருத்தப்பட்ட தொழிலாளா் நல சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும், கரோனா காலத்தில் வேலையிழந்த அனைத்து தரப்பு தொழிலாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் ரூ. 7,500 நிதி வழங்க வேண்டும், முறை சாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்டத் தலைவா் பொ.பன்னீா் செல்வம் தலைமையில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணைத் தலைவா் ஆா்.சிங்காரவேல், மாவட்டச் செயலாளா் டி.உதயகுமாா், மாநிலக்குழு உறுப்பினா்கள் எஸ்.கே.தியாகராஜன், ஆா்.வெங்கடபதி, ஏ.கோவிந்தன், ஆா்.வைரமணி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். பின்னா் திடீரென மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி வந்து மறியலில் ஈடுபட்ட 122 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
