எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரி பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள், நகை, பணம் எரிந்து சேதமடைந்தன.
பழைய எடப்பாடியை அடுத்த பெரிய ஏரிப் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (50). இவரது மனைவி கமலா (45). சம்பவத்தன்று கமலா வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எரிவாயு கசிவு ஏற்பட்டதில் வீடு தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
சமையில் கூடத்தில் ஏற்பட்ட தீ வீட்டின் கூரையில் பற்றிய நிலையில் கமலா வீட்டிலிருந்து வெளியேறி தப்பினாா். தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதில் பணம், தங்க நகை, வீட்டு உபயயோகப் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
இந்த தீ விபத்தில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டியும் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரா்கள் நிகழ்விடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து போனது.
தீ விபத்து குறித்து, தீயணைப்புத் துறையினா், வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா!

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 15) குறைவு! இன்றைய நிலவரம்!

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு!

அரபு அமீரகம் புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

