கலைஞர்களின் அப்பீல்கள்!

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஸ்ரீதேவிக்கு செக்ஸ் அப்பீல் உண்டா என்று வாசகர்கள் சிலரிடம் கேட்டு ஒரு பேட்டி
கலைஞர்களின் அப்பீல்கள்!
Updated on
1 min read

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஸ்ரீதேவிக்கு செக்ஸ் அப்பீல் உண்டா என்று வாசகர்கள் சிலரிடம் கேட்டு ஒரு பேட்டி வெளியாகியது. சிலர் ஸ்ரீதேவியின் அழகை, சிலர் அவரின் நடிப்பை, சிலர் அவரின் குரலை இப்படியாகத் தங்களுக்கு அவரிடம் மிகவும் பிட்த்த அம்சம் ஒன்றைச் சொன்னார்கள். மொத்தத்தில் அவர் இன்னும் திரையுலகில் நீடித்து நிற்பதற்குக் காரணம் துடிப்பான பேச்சு. இயல்பான நடிப்பு என்று தெரிந்தது அப்டேட்டில்.

**

நடிகர் சிவகுமார் சொல்லுவார், ‘ஈ.வி.சரோஜாவின் கண் அழகிற்காகவே அவர் நடித்த படங்களை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்!’ என்று.

**

சிவாஜியுடைய சிறப்பு அம்சம் கனல் தெறிக்கும் வசனம். பண்பட்ட நடிப்பு, இந்த நடிப்பு என்று அப்பீலால் மக்களிடம் அவர் செல்வாக்குப் பெற முடிந்தது. மிகை நடிப்பை அவர் வெளிப்படுத்தும்போது ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது உண்மைதான்.

**

அசட்டுத்தனமாகச் சிரித்து, பட்டும்படாமலும் எளிமையாக நடித்து மக்களைக் கவர்ந்தவர் நடிகர் முத்துராமன். சண்டைப் பட ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆருக்கு அடுத்து விருந்து கொடுத்தார் ஜெய்சங்கர்.

**

இன்று ராதிகா போல் அன்று மழலை பேசியவர் நடிகை சரோஜாதேவி. ஒன்றுமில்லை என்பதை ‘வொண்ணுமில்லே’ என்று கூறுவார். அவரது மழலை, துடுக்கு இவை ரசிகர்களை ஈர்த்தன. எம்.ஜி.ஆருடைய ஆதரவு கூடவே. திரையுலகில் சில வருடங்கள் மின்னினார். இவர் உருக்கமாக நடிக்கத் தொடங்கியதும் ரசிகர்களால் ஜீரணிக்க முடியாததால் திரையுலகை விட்டு அகன்று விட்டார்.

துடுக்கான பேச்சு, அலட்டிக் கொள்ளாமல் உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாங்கு ‘ஜீவனாம்சம்’ முதல் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை மாறுபட்ட இயல்பான நடிப்பு. அதனால் தான் கடந்த 12, 13 வருடங்களாக கதாநாயகியாக தமிழில் பவனி வருகிறார் லட்சுமி.

**

முத்துப் பல் வரிசை, கொள்ளைச் சிரிப்பு இவைகளுக்காகவே கே.ஆர்.விஜயா படத்தைப் பலர் பார்த்தார்கள். பெண்களைக் கவரும் விதத்திலும் நடித்தார். மார்கெட் டல்லான போது சொந்தமாகத் தானே படம் எடுத்துக் கதாநாயகியாகப் பவனி வருகிறார். இப்போது சிவாஜிக்கு ஜோடி. ஜாடிக்கேற்ற மூடி என்ற திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

**

தீபா போன்று இளமையை இன்ச் பை இன்சாகக் காட்ட நிறைய நடிகைகள் தோன்றி இருக்கிறார்கள். இளமை போய்விட்டால் என்ன செய்வார்களோ?

**

‘மழலை’க்காக ராதிகாவின் படத்தைப் பார்த்தவர்கள் இன்று அவர் ஓரளவு நன்றாக நடிக்கவும் செய்வதால் தொடர்ந்து அவரைச் சந்திக்கிறோம் பல படங்களில்.

இப்படி ஒவ்வொரு நடிக நடிகையரும் தங்களிடம் உள்ள ஒரே ஒரு சிறப்பு அம்சத்தினாலேயே ரசிகர்களை கவர்ந்து திரையுலகில் மின்னுகிறார்கள். அதுவே அவரவர்களுக்கு உரிய அப்பீல்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com