இப்போதும் எங்கேயுமாவது சந்திக்க நேர்ந்தால் 'அம்மா, சவுக்கியமா? ' என்று பரிவோடு கேட்பார்!

கலைஞர்கள் கண்ட மக்கள் திலகம் - பானுமதி
இப்போதும் எங்கேயுமாவது சந்திக்க நேர்ந்தால் 'அம்மா, சவுக்கியமா? ' என்று பரிவோடு கேட்பார்!
Published on
Updated on
1 min read

கலைஞர்கள் கண்ட மக்கள் திலகம் - பானுமதி 

மலைக்கள்ளன் படப்பிடிப்பு நடைபெற்ற போது  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கைரேகையை பார்த்து  'இது ஒரு அபூர்வமான ஜாதகம்' என்று ஸ்டெடி செய்து அவரிடத்திலேயே கூறினேன். 

ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டாக, டைரக்டராக, தயாரிப்பாளாராக இருந்து பெரிய  அரசியல் தலைவராக, மக்கள் மனதில் சிறந்த இடத்தைப்  பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சாராக அவர் வந்திருப்பது - எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவது சாதாரணமானதல்லவே? இதற்காக கலைஞர்கள் சமுதாயமே பெருமைப்பட வேண்டும்.

என்றோ நான் அவர் கை ரேகையை பார்த்து கூறியதை அதன் பின்பும் பல ஆண்டுகளுக்குப் பின்பும், மறவாமல் நினைவில் வைத்திருந்து அதைப்பற்றிச் சொல்லுவார். 

இவ்வளவு பெரிய பதவிக்கு வந்த பின்பும், எந்த வகையிலும் அவர் மாறாமல் இருப்பதைக் காண்கிறேன். 

இருபது வருடங்களுக்கு முன்பிருந்து அவரை நான் பார்த்து வருகிறேன். நடிக்கும் போது தன்  வரையில் நன்றாகச் செய்துவிட்டுப் போய் விடுவோம் என்று நினைக்கவே மாட்டார். தனது வேடத்தை மட்டுமல்ல  அருகில் நடிப்பவர் கேரக்டரும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புவார். பெரிய ஆர்ட்டிஸ்ட் சின்ன ஆர்ட்டிஸ்ட் என்று வேற்றுமையில்லாமல் எல்லாருக்கும் சொல்லித் தருவார்.அகம்பாவம் என்பதே இல்லாமல் எப்போதும் அடக்கமாக இருப்பார். அதனால்தான் எல்லோரிடமும் அவரால் அன்புடனும் பண்புடனும் பழக முடிந்தது.  

ரொம்ப மரியாதையாக கவுரமாக நடந்து கொள்ளக் கூடியவர். இன்னொருவர் கஷ்டம் காண சகிக்க மாட்டார். பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தெரியாமல் அனைவருடனும் பற்றோடு இருப்பவர். 

இப்போதும் எங்கேயுமாவது சந்திக்க நேர்ந்தால் கூட, 'அம்மா, சவுக்கியமா?' என்று பரிவோடு கேட்பார். அப்போது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறார். பல வெற்றிகளை சந்தித்து..பெரும் புகழ் பெற்று.பெரிய பதவிக்கு வந்த பிறகும்  அப்படியே இருப்பது அவருக்குள்ள தனிச்சிறப்பு. இதுபோல எல்லோரும் இருக்க மாட்டார்கள். 

எம்.ஜி.ஆர் கவனமாக ஜாக்கிரதையாக இருப்பதால் பயமின்றி  இருக்கிறார் 

நாகை தருமன் 
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.07.82 இதழ்)  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com