சில நாவல்களைப்  படிக்கிற பொழுது அதில் வருகிற சீரியஸான  பாத்திரத்தை ஏற்று நடித்தால் எப்படியிருக்கும் என்று தோன்றும்! 

வாஹினி ஸ்டூடியோவில், ராம நாராயணின் டைரக்ஷனில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' படப்பிடிப்பில் ஸ்மிதாவை சந்தித்த பொழுது, எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. 
சில நாவல்களைப்  படிக்கிற பொழுது அதில் வருகிற சீரியஸான  பாத்திரத்தை ஏற்று நடித்தால் எப்படியிருக்கும் என்று தோன்றும்! 

வாஹினி ஸ்டூடியோவில், ராம நாராயணின் டைரக்ஷனில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' படப்பிடிப்பில் ஸ்மிதாவை சந்தித்த பொழுது, எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. 

ஏனெனில் ஸ்மிதா எத்தகைய உடையோடு எப்படிக் காட்சியளிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேனோ, அந்த மாதிரி இல்லாமல் குடும்பபப் பெண்ணைப் போல, சேலைகட்டி ஜாக்கெட்டெல்லாம் சரியாகப்போட்டுக் கொண்டு, சர்வ அடக்கமாக காணப்பட்டார் என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்?

படப்பிடிப்பு இடைவேளைகளில் அவரிடம் பேசியதிலிருந்து:

'நடிக்க வரும் போது கவர்ச்சியாகத்தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினீர்களா?' என்ற கேள்விக்கு சில நிமிடங்கள் சிந்தித்த பின்பு ஸ்மிதா பதில் சொன்னார்.

கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். கவர்ச்சியாக நடித்தால் அவர் கவர்ச்சி வேடங்களுக்கு மட்டுமீ பொருத்தமானவர், கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்?இப்போதெல்லாம் சில நாவல்களைப்  படிக்கிற பொழுது அதில் வருகிற சீரியஸான  பாத்திரத்தை ஏற்று நடித்தால் எப்படியிருக்கும் என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வதுண்டு.

சிலுக்கு ஸ்மிதா எனும்போது படு கவர்ச்சி, குறைந்த உடைகள், மயக்கும் கண்கள் இப்படி ஒரு இமேஜ் ஏற்பட்டு விட்டதே? இந்த இமேஜை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறீர்களா? 

நிச்சயமாக! அதில் என்ன ஆட்சேபனை? நான் பெரும்பாலும் ஏற்று நடித்துள்ள கேரக்டர்கள் அப்படிப் பட்டவை.அதிலிருந்து எனக்கு அந்த மாதிரி ஒரு இமேஜ் உருவாகியிருக்கிறது.  என்றால் அது என்னுடைய கேரக்டர்களுக்கு கிடைத்த வெற்றியே  தவிர வேறு என்ன?

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் சிறந்த கேரக்டரில் தோன்றியாது போல வேறு அந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறீர்களா?

வண்டிச் சக்கரத்திற்கு பிறகு கிளாமரான ரோல்களே வந்து கொண்டிருந்த பொழுது, பாரதிராஜா எனக்கு முற்றிலும் வித்தியாசமான வேஷத்தைக் கொடுத்து என்னுடைய நடிப்புத் துறையில்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.பாரதிராஜா துணிச்சலாக எனக்கு அந்த வேடத்தைக்  கொடுத்தார். அதேஹ் போல் இன்னொரு கேரக்டர் பண்ணணும்கிற ஆசையிருக்கு. ஆனால் அது மாதிரி அழகா அமையணுமே  ஐம்பது பர்சென்ட் நம்பிக்கையிருந்தால் கூட முயற்சி பண்ணலாம்.

'இப்போ நீங்க நடிச்சுகிட்டுஇருக்கற கேரக்டர்கள்..' என்று அடுத்த கேள்வியை ஆரம்பிக்கும் போதே ஸ்மிதா கேள்வியை புரிந்து கொண்டு..

எல்லாமே கதையோட ஒன்றிப்போன கேரக்டர்கள்தான். கதையோட கலந்த கதாபாத்திரமா இருந்தால்தான் படம் பாக்கிறவங்க மனசிலே நிக்கும். இப்ப நான் ஆறு படங்களில் கதாநாயகியா நடிச்சுகிட்டுஇருக்கேன். நான் ஹீரோயினை தேடிப்போகலே.. ஹீரோயின் என்னைத் தேடிவருது.

(சினிமா எக்ஸ்பிரஸ்  15.04.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com