எனக்குத் தெரிஞ்ச ஒரே டெக்னிக்கல்  கதை சொல்றதுதான்!

லயோலா கல்லூரியின் திரைக்கலை  மன்றத்தின் சார்பில்  அழைக்கப்பட்டிருந்த டைரக்டர் பாக்யராஜ்  அரைமணி  நேரம் தாமதம் என்றாலும், வந்து விட்டார்.
எனக்குத் தெரிஞ்ச ஒரே டெக்னிக்கல்  கதை சொல்றதுதான்!

லயோலா கல்லூரியின் திரைக்கலை  மன்றத்தின் சார்பில்  அழைக்கப்பட்டிருந்த டைரக்டர் பாக்யராஜ்  அரைமணி  நேரம் தாமதம் என்றாலும், வந்து விட்டார்.

கல்லூரியின் டைரக்டர் பாதர் சுகமீர் ராஜ்  தலைமையுரைக்குப் பின் பேசிய பேராசிரியர் ராமன்,பாக்கியராஜை பற்றி பேசும் பொழுது, அவருக்கு வெலவெலப்பு ஏற்படும் படி 'தமிழகத்தின் முதலமைச்சராக வரும் வாய்ப்பு பாக்யராஜுக்கு இருப்பதாகவும்'    ஆருடம் சொல்லி விட்டு அமர்ந்தார்.

பாக்யராஜ் சிறிது நேரம் பேசிய பின் துவங்கியதும் யாவரும் விரும்பிய கேள்வி நேரப் பகுதி.

பாக்யராஜ் படங்களில் தொடர்ந்து இடம்பெறும் எம்.ஜி.ஆர் பிராப்பகண்டா பற்றி?

நான் சினிமாவுக்கு வந்த பின்னாடிதானே  எம்.ஜி.ஆரைப்பத்தி சொல்றேன். ஏ.ஜி,.ஆர் பேரை சொல்லிக்கிட்டு வரலையே?என் பர்சனல் டேஸ்ட்; அவரை என் படங்களில் காட்டிட்டு வரேன். கட்சிப் பிரச்சாரம் பண்ணலயே? யாருக்கும் ஒட்டு கேட்கலையே?

உங்கள் திரைப்படங்களில் டெக்னிக்கில் இண்ட்ரஸ்டிங் எடுத்துக் கொள்வதில்லையே?

டெக்கனிலா  சொல்றது ஒரு முறை.கதையை சொல்றது ஒரு முறை. டெக்னிக்கலா டைரக்டர் பாரதிராஜா அழகா செய்வாரு. எனக்குத் தெரிஞ்ச ஒரே டெக்னிக்கல்  கதை சொல்றதுதான்.வேற விஷப்பரீட்சையில் நான்  இறங்க மாட்டேன்.

பாக்கியராஜ் லட்சிய படைப்புகளை பண்ண வேண்டும் என்று ஒரு கோரிக்கை.

லட்சியப் படைப்பில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது சார்.இப்படியே போயிட்டா போற மட்டும் போகலாம்.

படங்களில் டைரக்டர் பாலசந்தர் பற்றி ..?

பாலச்சந்தர் டேஸ்ட் தனி. நான் அவருடைய படங்களை ரெண்டு மூணு தடவை பாக்கிறதுண்டு. வித்தியாசமா செய்வாரு. எனக்கு காம்படீஷனா நான் எடுத்துக்கறதே அவரைத்தான்.

மற்ற மொழிப்  படங்களுக்கு தமிழ்ப்படங்கள் எப்படியிருக்கின்றன?

தமிழ்ப்படங்கள் அட்வான்ஸ் ஸ்டேஜிலஇருக்கு. தமிழ் டைரக்டர்களை மத்த மொழிக்காரங்க ஏத்துக்கிற மாதிரி, அங்கேயுள்ளவளை இங்கே ரிஸீவ் பண்ணாத தயாரா இல்லை.

இ.மருதம்.

படங்கள்: லலிதா

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.04.1982 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com