முதன் முதலில் காமிரா முன் நிற்கிறார்.  அதுவும் கமலுடன்? சரியாக வருமா?

நான் சந்தித்த நாயகிகள் - கே.பாக்யராஜ்
முதன் முதலில் காமிரா முன் நிற்கிறார்.  அதுவும் கமலுடன்? சரியாக வருமா?
Published on
Updated on
1 min read

நான் சந்தித்த நாயகிகள் - கே.பாக்யராஜ்

'சிகப்பபு ரோஜாக்கள்' வடிவுக்கரசிக்கு முதல் படம். முதல் ஷாட்டே கமல்ஹாசனுடன்.நான் அந்த படத்தின் உதவி இயக்குனரோடு   வசனகர்த்தாவும் கூட. அந்த ஒரு ஷாட்டிற்கு நீளமான வசனங்கள் நிறைய எழுதி இருந்தேன். கமலைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. காரணம், அவர் அந்த வசனங்களை மிக சாதாரணமாக பேசி நடித்துவிடுவார் என்று தெரியும். ஆனால் வடிவு? புதுமுகம்..முதன் முதலில் காமிரா முன் நிற்கிறார்.  அதுவும் கமலுடன்? சரியாக வருமா? என்று எல்லோரும் ஐயப்பட்டோம்.

காமிரா ஸ்டார்ட் ஆனது. கமல் பேசினார். வடிவும் பேசினார். ஏறக்குறைய டேக் முடியும் நேரம், கடைசி வசனம் பேசும் பொழுது,  'யானைக்கும் அடி  சறுக்கும்' என்பது போல கமல் கவனக்குறைவாக் "சித்ரா" என்று குறிப்பிட வேண்டிய வடிவின் பெயரை "சந்திரா" என்று உச்சரித்து விட்டார்.  சரி..ரீடேக்தான் என்று நினைத்தேன். டைரக்டர் பாரதிராஜா அவர்களும் 'கட்' சொல்ல வாயெடுத்தார்.   

அதற்குள் வடிவு, "சாரி சார்! மை நேம் ஈஸ் சித்ரா" என்று சமயோசிதமாக ஒரு வசனத்தை சேர்த்து கமலுக்கு பெயரை நினைவூட்டி சமாளித்தார். வடிவின் இந்த வசனத்தைக் கேட்டதும், தான் தவறு செய்துவிட்டோம் என்று உண்னர்ந்த கமல் அடுத்த வசனத்தை மறந்து விடுவாரோ என்று பயப்பட்டோம். ஆனால் சுதாரித்த கமல், 'சாரி' என்று சொல்லி அப்படியே தான் பேச  வேண்டிய அடுத்த வசனத்தை நினைவுக்கு கொண்டு வந்து சரியாக பேசி, அந்த 'டேக்கை ' ஓக்கே செய்தார்.

டைரக்டர் உட்பட நாங்கள் அனைவரும்  கைதட்டி இருவரையும் பாராட்டினோம். இதில் கமல் திறமையை நாங்கள் பாராட்டியது சாதாரண விஷயம். அனால் முதல் முதலாக நடிக்க வந்த வடிவு, கமலின் தவறை நாசூக்காக, சொந்த வசனம் மூலம் அட்ஜஸ்ட் செய்தது இன்னும் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

வடிவுக்கரசியின் திறமையை பார்க்கும்பொழுதுஅவர் திரை உலகத்திற்கு மிக காலதாமதமாக என்ட்ரி கொடுத்து விட்டார் என்று நினைக்கிறேன்.

திரை உலகத்தில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தும் தகுதி உள்ளவர்.

(சினிமா எக்ஸ்பிரஸ்  15.06.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com