ரஜினி ஸ்டைலை யாரிடம் இருந்து கற்றீர்கள்?

ரஜினி ஸ்டைலை யாரிடம் இருந்து கற்றீர்கள்?

ரஜினிகாந்த் பதில்கள்
Published on

01.12.81

எம்.ஏ.ராஜா , பெரியகுளம்

ரஜினி ஸ்டைலை யாரிடம் இருந்து கற்றீர்கள்?

சிவாஜி ராவிடம் இருந்து.

&&&&&&&

01.12.81

கே.வி.பூர்ணசந்திர காந்தி, குமாரபாளையம், சேலம்

இந்தியில் சான்ஸ் கிடைத்தால், தமிழ்ப் பட உலகை புறக்கணித்து விடுவீர்களா?

ஏற்றி வைத்த ஏணியை எட்டி உதைக்கு பழக்கம் எனக்கு இல்லை.

&&&&&&

ஆர்.பி,சுந்தர்ராஜ், விக்கிரமங்கலம்

உங்களது வளர்ச்கிக்கு காரணம் ஸ்டை லா? நடிப்பா?

ஸ்டைலான நடிப்பு

&&&&&

கே.சுதாகர்  சென்னை-75

தமிழ்ப்பட உலகில் சாதாரண இடத்தில் இருந்து பெரிய நடிகராக முன்னேறி இருக்கிறீர்கள். "சூப்பர் ஸ்டார்" பட்டத்திற்குப் பின் தாங்கள் பழைய படங்களில் காட்டிய நடிப்புத்திறனை இப்போது ஏன்  காட்டவில்லை? 

பழைய படங்களில் உள்ள  நடிப்புத்திறன் இப்போது இல்லை என்ற உங்கள் கருத்து சரி அல்ல. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்பவே நான்  நடிக்க முடியும்.

&&&&&

15.12.81

ராராஜசேகர், சென்னை -7

இந்திய அரசியலைப்  பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

நமது நாடு ஒரு விளையாட்டு மைதானம். இங்கே அரசியல் எனபது ஒரு விளையாட்டு. விளையாடுபவர்கள் அரசியல்வாதிகள். விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com