எச்சில் இரவுகள்

எச்சில் இரவுகள்

இவற்றுக்கெல்லாம் விளக்கமாக விடையை பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் ‘நியூவேவர்ஸ்’ தயாரிக்கும் ‘எச்சில் இரவுகள்’ படத்தில் தருகிறார்.

சமுதாயத்தின் அடித்தளத்தில் ஆழ்ந்துள்ள பல உண்மைகள் பார்வைக்குப் புலப்படுவதில்லை.

பகலில் சாதாரணமாகக் காட்சியளிக்கும் பலரின் சுய ரூபங்கள் இரவில் தெரியவரும் போது…

பார்த்த முகங்கள், ஆனால் பார்த்திராத பார்க்கக் கூடாத காட்சிகள்…அந்தரங்கம் பேசத் தொடங்கினால் அங்கே அதிர்ச்சிகளின் அணிவகுப்பு!

சந்திரனின் இருண்ட பகுதியில் நடப்பது என்ன…

இவற்றுக்கெல்லாம் விளக்கமாக விடையை பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் ‘நியூவேவர்ஸ்’ தயாரிக்கும் ‘எச்சில் இரவுகள்’ படத்தில் தருகிறார்.

’எச்சில் இரவுகள்’ என்று நூதனமான முறையில் படத்துக்கு பெயர் சூட்டியிருக்கிறார்களே என்று அவரிடம் கேட்ட போது விளக்கினார்.

அழுத்தப்பட்ட வர்க்கத்தின் எழுச்சி, தாழ்த்தப் பட்ட ஜீவன்களின் வக்காலத்து, தோற்றுப் போன வழக்கின் அப்பீல்…’ இதுவே ‘எச்சில் இரவுகள்’ கதையின் கரு.

இந்தக் கருத்தின் அடிப்படையில் அழகான ஒரு காதல் கதையை வரைந்திருக்கிறேன். இதன் கதைக் கரு, கதைக் களம், கதாபாத்திரங்கள், தருகின்ற பாணி அனைத்திலும் புதுமை…அத்துடன் பிலிமிங்கிலும் புதுமை உண்டு.

‘எச்சில் இரவு’களில் சந்திக்கவிருக்கும் கேரக்டர்கள் அசலாக வாழ்ந்து வருகின்ற கேரக்டர்களாகும்.

நான் உருவாக்கியுள்ள கேரக்டர்கள் வானவீதிகளில் கண்டு பிடித்தவை அல்ல. வாழ்க்கை வீதியில் கண்டெடுத்தவையே.

என்னுடைய கேரட்கர்கள் நிலா முற்றத்தில் நேர்முக வர்ணனை அல்ல. படுத்தும், தூக்கமில்லாத பாமர ஏழையின் பெருமூச்சு விண்ணப்பங்கள்!

சறுக்கி விழுந்த தேவதைகள்!

வானத்தில் விழுந்த நட்சத்திரம்! இன்று சாக்க்டையாகக் காட்சியளிக்கின்ற கூவத்தின் ஆரம்பம். ஒரு தெளிந்த நீரோடை. இவையே நான் அறிமுகப் படுத்துகிற முக்கிய கதாபாத்திரங்களில் தன்மை. கேரக்டர்களை உற்றுக் கோடிட்டுக் காட்டுவதென்றால்..

ரூபா – ஏழைப்பென். நடைபாதையே இல்லம்.

பிரதாப் – இரவில் அந்தப் பெண் உறங்கும் போது துணைக்குப் படுப்பவர் இவர்.

ரவீந்தர் – ஹீரோவுக்கு டூப் போடுபவர்

இப்படத்தின் கதைக்கேற்ப ஒளிப்பதிவு இயற்கையாக, யதார்த்தமாக அமைந்திருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தேன்.

பாலு அவர்கள் பல சாகச சாதனைகளைப் புரிந்திருக்கிறார். லைட்கள் இல்லாமலே இரவு காட்சிகளைப்புதுமையாக எடுத்திருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக இதனை ‘எக்ஸ்பரிமெண்ட்’ பண்ணி சாதனை புரிந்திருக்கிறார் பாலு மகேந்திரா. பிலிமிமிங்கிலும் பல புதிய உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இரவு காட்சிகளை எடுப்பதற்காகப் பிரத்யேகமான கேமிரா பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இயற்கை, யதார்த்தம் என்பது உண்மையாகவே இப்படத்தில் யதார்த்தமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய இசை அமைப்பாளர் இளையராஜா சிறப்பாக இசை அமைத்துள்ளார். இசையிலும் புதுமைகள்…ரசிக்கத்தக்க பாட்டுகளைத் தந்திருப்பதுடன் அவரது பங்கிலும் யதார்த்தம் உண்டு.

இந்தப் படம் திரை உலகத்துக்கு ஒரு கான்டிரிபியூஷன் என்று நான் கருதுவதுண்டு. வானத்தைப் பார்க்க மனிதன் நிமிர்ந்து பார்க்கிறான். ஆனால் அவன் பாதங்கல் தமிழ் மண்ணில்தான் இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com