நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை - எஸ்.வி,சேகர்

நாடக மேடையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் எஸ்.வி,சேகர். அவரை பேட்டி கண்ட பொழுது...
நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை - எஸ்.வி,சேகர்

உங்கள் சொந்த ஊர் எது ? என்று பேட்டியைத் தொடங்கினேன்.

தஞ்சாவூர்தான் சேகரின் சொந்த ஊர். பிறந்தது,படித்தது அங்குதான். பிறகு சேகரின் தந்தைக்கு சென்னை வாகினி ஸ்டூடியோ லேபரேட்டரியில் வேலையானதால் குடும்பம் சென்னைக்கு வந்து விட்டது. ஆறாம் வகுப்பு வரை திருவவல்லிக்கேணி ஹை ஸ்கூல், எஸ்.எஸ்.எல்.சி வரை மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூல், பி.யூ.சி விவேகானந்தா கல்லூரி, அதன்பிறகு அடையார் சென்ட்ரல் பாலிடெக்னிக்கில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ, அதோடு ஏர் கண்டிஷன் மற்றும் ரெபிரிஜிரேஷனில் டிப்ளமோ.

சேகருக்கு ஸ்டில் போட்டோகிராபியில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதை ஹாபியாக செய்துவரும் அவர் சில மலையாள படங்களுக்கு ஸ்டில் போட்டோகிராபராகவும் பணியாற்றியிருக்கிறார்.

ஆனா விளம்பரப்படங்கள் எதிலும் சேகர் நடிப்பதில்லை. நரசுஸ் காபி விளம்பரத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். அவ்வாறு விளம்பர படங்களில் நடிப்பது, வியாபார ரீதியிலான திரைப்படங்களில் தான் நடிப்பதை பெரிதும் பாதிக்கும் என்று எண்ணுகிறார்.

சேகரின் நாடகங்கள் அனைத்தும் நகைச்சுவை நாடங்களே.நாடக ஆசிரியர் கிரேசி மோகனின் முதல் நாடகத்தை அரங்கேற்றியது சேகரின் குழுதான். 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' என்ற மோகனின் நாடகம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.

மவுலி முதன் முதலில் டைரக்ட் செய்த 'அவன் ஒரு தனி மரம்'  நாடகம் சேகரின் நாடகப்ரியா நாடகக் குழுவிற்குத்தான்.

"நாடகம் தனக்கு லாபகரமாக இல்லை; அதே நேரம் நஷ்டம் ஏற்படுத்தவும் இல்லை" என்றார் சேகர்.

நிறைய படங்களில் கிடைத்த பாத்திரங்களில் எல்லாம் நடிப்பதில் சேகருக்கு விருப்பம் இல்லை.நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. தனக்குப் பிடித்த, தன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தக் கூடிய படங்களாக இருந்தால் மட்டும்தான் ஒத்துக் கொள்கிறார். இதனால் சென்ற வருடம் மட்டும் பல வாய்ப்புகளை மறுத்து விட்டு 10 படங்களில் மட்டும்தான் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 

இதுவரை நான் நடித்த படங்களில் 'மணல் கயிறு', ';சிம்லா ஸ்பெஷல், 'வறுமையின் நிறம் சிகப்பு' மற்றும் 'சுமை' ஆகிய படங்களில்தான் தன் நடிப்பும் கதாபாத்திரமும் தனக்கு திருப்திகரமானதாக அமைந்தது என்கிறார்.

பேட்டி: தேவகி குருநாத்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.06.84 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com