சமீப காலமாக ஆவின் அரைலிட்டர் பால் பாக்கெட்டில் முழு அளவு இருப்பதில்லை. குறைந்தபட்சம் 100 மிலியாவது குறைகிறது. பிற பால் பாக்கெட்டுகளில் அளவு சரியாக இருக்கும்போது அரை லிட்டர் பால் பாக்கெட்டில் மட்டும் அளவு ஏன் குறைகிறது? அரை லிட்டர் பாலின் விலை ரூ.17. சில பால் பாக்கெட்டுகளில் தேதிகள் இல்லாமலும் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.சந்தானம், குரோம்பேட்டை.