அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பார்க் சாலை தபால் நிலையம் அதிக வசதியுடன் செயல்பட்டாலும் அங்குள்ள கணிப்பொறி பல ஆண்டுகளாகச் செயல்படவில்லை என்பது வருந்தத்தக்கது. இங்கு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் எடுக்க முடியவில்லை. பணம் வாங்கவும், பாஸ்புக் என்ட்ரி போடவும் பலமுறை செல்ல வேண்டியுள்ளது. வட்டார, மண்டல அலுவலகத்தினர் இந்தப் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனஜாதாஸ், அண்ணாநகர் மேற்கு.