சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 2}ஆவது அவென்யூ எம்.ஜி. சாலை, சிவகாமிபுரம் குறுக்குத் தெரு ஆகியவற்றின் பெயர்ப் பலகை சேதமடைந்தது குறித்து தினமணி ஆராய்ச்சி மணியில் செய்தி வெளியானது. தற்போது அவை மாற்றப்பட்டு புதிய பெயர்ப்பலகை அமைத்துள்ளனர். செய்தி வெளியிட்ட தினமணிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.