சென்னை 128-ஆவது வட்டம் விருகம்பாக்கம் பகுதியிலுள்ள வேம்புலியம்மன் கோயில் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு தார்ச் சாலை போடப்பட்டது. கடந்த 2015-இல் பெய்த பெருமழையின்போது, சாலை சிதிலமடைந்துவிட்டது. அதன் பிறகு, இந்தத் தெருவைப் புதுப்பிக்கவோ, செப்பனிடவோ இல்லை. இந்தத் தெருவில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், பள்ளி மற்றும் கல்லூரியும் உள்ளன. மேலும், விருகம்பாக்கத்தின் தென் பகுதி முழுவதும் ஆற்காடு சாலையைத் தொடர்பு கொள்ளும் இடமாக வேம்புலி அம்மன் கோயில் தெரு உள்ளது. பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலையைப் புதுப்பிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ. பட்டாபிராமன், விருகம்பாக்கம்.