சென்னை நந்தனம் டர்ன்புல் சாலை குடியிருப்பின் முதல் பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டி உடைந்துவிட்டது. அதனால் தொட்டியில் கொட்டப்படும் குப்பையில் பாதி வெளியே விழுந்து பெரிய குப்பைமேடாக காட்சியளிக்கிறது.மேலும் குப்பை அள்ளும் லாரியும் சரிவர வருவதில்லை. எனவே, புதிய குப்பைத் தொட்டியை அங்கு வைப்பதுடன், லாரிகள் மூலம் குப்பைகளை அவ்வப்போது அகற்றவும் பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ரோகிணி, நந்தனம்.