தேவை மகளிர் பேருந்து

மாநகரப் பேருந்துகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிக்கும் பெண்களும், கல்லூரி மாணவிகளும் இடது பக்கத்தில் இருக்கும் மகளிர் இருக்கைகள் நிரம்பி வழிவதால்,

மாநகரப் பேருந்துகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிக்கும் பெண்களும், கல்லூரி மாணவிகளும் இடது பக்கத்தில் இருக்கும் மகளிர் இருக்கைகள் நிரம்பி வழிவதால், வலது பக்கம் உள்ள ஆண்களுக்கான அல்லது பொது இருக்கைகளில் அமர்ந்து விடுகின்றனர். இதனால், முதியோர்அல்லது உடல்நலமில்லாத ஆண்கள் பல நிமிடங்களுக்கு நின்று கொண்டே பயணிக்க வேண்டியுள்ளது. மேலும், இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் பெண்களுக்கு எதிரான தொந்தரவுகள், வழிப்பறிகள் போன்றவை நடைபெறுகின்றன. எனவே, காலை மற்றும் மாலை வேளைகளில் மகளிருக்கான தனிப் பேருந்துகளை அனைத்து வழித்தடங்களிலும் இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 எஸ்.ஞானப்பிரான், கொளப்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com