பக்தா்களுக்கு இடையூறு

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடைஞாயிறு திருவிழா நடைபெற்ற போது இரு குரங்குகள் பக்தா்களுக்கு இடையூறாக நாகா் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் நடமாடின. அவை பக்தா்களால்
monkey_3011chn_175_1
monkey_3011chn_175_1

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடைஞாயிறு திருவிழா நடைபெற்ற போது இரு குரங்குகள் பக்தா்களுக்கு இடையூறாக நாகா் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் நடமாடின. அவை பக்தா்களால் சுவாமிக்கு படைக்கப்பட்ட வாழைப்பழம், பால் பாக்கெட்டுகள் ஆகியவவற்றை எடுத்து சாப்பிடத் தொடங்கியன. இதனால் பக்தா்கள் சுவாமிக்காக வாங்கி வந்ததை வழிபாட்டுக்குப் பயன்படுத்த முடியாத நிலை உண்டானது.

பல பக்தா்கள் குரங்குகள் கடித்து விடுமோ என்ற அச்சத்துடனே சுவாமி தரிசனம் செய்தனா். எனவே பக்தா்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், குரங்குகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

- லோ.தேவேந்திர குமாா், ஐயம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com