ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை
By DIN | Published On : 17th February 2020 03:12 AM | Last Updated : 17th February 2020 03:12 AM | அ+அ அ- |

சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச் சாலை, உத்தமர் காந்தி சாலை, ஹடோஸ் சாலை, வள்ளுவர் கோட்டம் சாலை ஆகிய சாலைகளிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடைகள் வைத்து நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் நான்கு சக்கர வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளிலேயே பாதுகாப்பின்றி நடந்து செல்லவேண்டியுள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீ.நவநீதக்கண்ணன்,
ராஜா அண்ணாமலைபுரம்.