வீட்டுக் குழாய்களில் குடிநீர் வருவதில்லை...!
By DIN | Published On : 17th February 2020 03:12 AM | Last Updated : 17th February 2020 03:12 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 8, வார்டு 95 வில்லிவாக்கம் பொன்னாங்கிணறு தெருவில் உள்ள வீட்டுக் குழாய்களில் கடந்த ஒரு மாதமாக குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதுபற்றி, குடிநீர் வாரியத்தில் முறையிட்டால் லாரி மூலம் தண்ணீர் அனுப்புவதாகச் சொல்கின்றனர். வீட்டு இணைப்புகளில் தண்ணீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.அரிகரன்,
வில்லிவாக்கம்.