நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை !

சென்னை கீழ்க்கட்டளையில் இருந்து மயிலாப்பூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை.

சென்னை கீழ்க்கட்டளையில் இருந்து மயிலாப்பூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை. மேலும், கீழ்க்கட்டளையில் இருந்து பிராட்வே வரை தடம் எண்.187 மாநகரப் பேருந்து, குறைந்த அளவிலேயே இயக்கப்படுகிறது. அதேபோல, தியாகராய நகரிலிருந்து திருவொற்றியூருக்கும் பேருந்து வசதி இல்லை. திருவொற்றியூரில் இருந்து இயக்கப்பட்டு வந்த 1பி, 1இ, 1தி, 34, 4டி, 103, 138ஏ ஆகிய வழித்தட பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் இயக்க மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com