பகுதி 51 – அச்சோப் பதிகம் - 3

பிறப்பு, இறப்பு என்கிற பெரிய சுழலிலே சிக்கித் தடுமாறினேன், எதெதிலோ ஆசை வைத்தேன், அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களுடன் கலந்து விழுந்துகிடந்தேன்,
Published on
Updated on
1 min read

‘அச்சோ’ என்பது வியப்பு அல்லது இரக்கத்தைக் குறிக்கும் சொல். சிவபெருமான் தனக்குச் செய்த அருளை எண்ணி வியந்து / நெகிழ்ந்து போற்றும்வகையில் அமைந்த பாடல்கள் இவை.

தில்லையில் அருளப்பட்டவை. பன்னிரண்டு பாடல்களின் தொகுப்பு. சிலர் ஒன்பது பாடல்கள் என்றும் சொல்வார்கள்.

270

பாடலின்பம்

சாதல்,பிறப்புஎன்னும் தடம்சுழியில் தடுமாறிக்

மாதுஒருகூறுஉடைய பிரான் தன்கழலே சேரும்வண்ணம்

ஆதி எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.

*

செம்மைநலம் அறியாத சிதடரொடும் திரிவேனை

மும்மைமலம் அறுவித்து முதல்ஆய முதல்வன்தான்

நம்மையும் ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த

அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.

பொருளின்பம்

பிறப்பு, இறப்பு என்கிற பெரிய சுழலிலே சிக்கித் தடுமாறினேன், எதெதிலோ ஆசை வைத்தேன், அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களுடன் கலந்து விழுந்துகிடந்தேன்,

அனைத்துக்கும் ஆதிமுதல்வன், உமையம்மையைத் தன் உடலின் ஒரு பகுதியாகக் கொண்ட சிவபெருமான் எனக்கு அருள்செய்தான், தன்னுடைய திருவடிகளில் என்னைச் சேரச்செய்தான்,

அடடா! அந்தப் பெருமானின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!

*

சிறப்பு எது என்று தெரியாத முட்டாள்களுடன் நான் திரிந்துகொண்டிருந்தேன்,

அனைத்துக்கும் முதலாகத் திகழும் முதல்வன், சிவபெருமான் என்னுடைய மூன்று மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) அறுத்தான், 

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, இந்த நாயைப் பல்லக்கில் ஏற்றுவித்தான்,

அடடா! நமக்கு அன்னையெனத் திகழும் அந்தப் பெருமானின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!

சொல்லின்பம்

தடம் சுழி: பெரிய சுழல்

அணி இழையார்: அழகிய அணிகலன்களை அணிந்தவர்கள்

மாதுஒருகூறுஉடைய பிரான்: உமையம்மையைத் தன் உடலின் ஒரு பகுதியாகக் கொண்ட தலைவன் / சிவபெருமான்

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

சேரும்வண்ணம்: சேரும்படி

ஆதி: முதல்வன்

அருளியவாறு: அருளியதன்மை

ஆர்: யார்

அச்சோ: அடடா (இரக்கக் குறிப்பு)

செம்மைநலம்: சிறப்பு

சிதடர்: முட்டாள்கள்

மும்மைமலம்: மூன்று மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை)

சிவிகை: பல்லக்கு

அம்மை: அன்னை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com