பகுதி - 20

நேற்றைய பாடலின் பொருளுக்குள் போவதற்கு முன்னால் ஒரு வார்த்தை. இந்தப் பாடலின் கடைசியில் வரும்
Updated on
2 min read

நேற்றைய பாடலின் பொருளுக்குள் போவதற்கு முன்னால் ஒரு வார்த்தை. இந்தப் பாடலின் கடைசியில் வரும்

முத்தா முத்தீ யத்தா சுத்தா

முத்தா முத்திப் பெருமாளே

என்பதை ‘மகுடம்’ என்று சொல்வார்கள். ஒரு பாடலுக்கு மேலே ஒரேவிதமான கடைசியடி அல்லது மடக்கு பயில்வதற்கு மகுடம் என்று பெயர். இந்த ஈற்று அமைப்பில், இந்தப் பாடலையும் சேர்த்து மொத்தம் 11 பாடல்கள் உள்ளன. சந்தமும் இதே சந்தம்தான். இப்போது பொருளைப் பார்ப்போம்.

இது மகா சிக்லான பாட்டு. அக்கக்காகப் பிரித்து, முன்னொருமுறை செய்தோமே அதைப்போல, புதுக்கவிதை மாதிரி மடக்கிப் போடுவோம். (பல இடங்களில் ஒற்றை விட்டிருக்கிறேன். புலவர் பெருமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்).

உற்பாதம்

பூத காயத்தே

ஒத்து ஓடி

தத்து இயல்காலை

உள்பூரித்தே

சற்றே சற்றே உக்காரித்து

அற்புதன் நேரும் அற்பாய்

இல்தாய்

நிற்பாரைப் போல

பாவித்துத் திரிவேனுக்கு…

அப் பாசத்தால் எட்டா

அப்பாலை போதத்தை புரிவாயே

பொற்பு ஆர் பொன் பார்

புத்தேளிருக்காகப் போய் முட்டி கிரி சாடி,

புக்கு ஆழி சூழ்

கிட்டாகி சூர்,

பொட்டாகக் குத்திய வேலா

முன்,

பாடப் பாடு அற்றாருக்கு

ஒரு முள் காடு அற்கப்

பொருள் ஈவாய்

முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

முத்தா! முத்திப் பெருமாளே!

சிக்கலான கட்டைப் பிரித்தாயிற்று. இனி பொருளைப் பார்ப்போம்.

உற்பாதம் பூ தக் காயத்தே - உற்பாதம். துர்குறி, கெட்ட சகுனம். பூதம்: ஐந்துபூதங்கள், பஞ்ச பூதங்கள். காயம். உடல்.

எப்போதும் (பலவிதமான உபாதைகளாகிய) கெட்ட சகுனங்களையே (காட்டிக் கொண்டிருக்கும்) ஐம்பூத (சேர்க்கையால் உண்டான இந்த) உடலை (காயத்தை)

ஒத்து ஓடித் தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே

உக்காரித்து - (இப்படிப்பட்ட இந்த உடலை) ஒத்து, அனுசரித்து, உடன்பட்டு, (அது போகும் போக்கோடு) ஓடி, ஆபத்து நேரும்போது உள்ளம் கவலையால் நிறைந்து, கொஞ்ச கொஞ்சமாக (சற்றே சற்றே) உக்காரித்து — வேதனைக் குரலை எழுப்பி

நாம் இன்று பயன்படுத்திக்கொண்டுள்ள பல சொற்களை, தலைகீழான பொருளில் வழங்கிக் கொண்டிருக்கிறோம். பிரமாதம் என்றால் குற்றம் என்று பொருள். மரணப்பிரமாதம் நமக்கில்லை என்று குருநாதர் பாடியிருக்கிறார். அதைப்போலத்தான் இந்த ‘பூரித்தல்’ மனம் பூரித்தது என்றால், மகிழ்ச்சியால் நிரம்பிப் பருத்தது என்று நினைத்துக்கொள்கிறோம். கவலையால் நிறைவது பூரித்தல்!

அற்புதன் நேரும் அற்பாய் இல் தாய் நிற்பாரைப் போலப்

பாவித்துத் திரிவேனுக்கு - அற்புதன்: இறைவன்; அற்பாய்: அன்பாய்; இல்தாய்: இல் = இல்லறம், தாய் = தாவி

இறைவனிடத்தில் அன்பு பாராட்டியவராய், (எல்லாப் பற்றுகளையும் விட்டுவிட்டவராய் வெளியே காட்டிக் கொண்டு) இல்லற வழிக்குள்ளே தாவிக் குதித்துத் திரிபவர்களைப் போல பிறரை ஏமாற்றித் திரியும் எனக்கு,

அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே - அப் பாசத்தால்: அந்தப் பாசத்தால்; எட்டா: எட்டாத; அப்பாலை: அப்பாற்பட்டு நிற்பதாகிய; போதத்தை: ஞானத்தை; புரிவாயே: உபதேசம் புரிந்து அருள்வாய்.

இப்படிப்பட்ட பாசங்களால் (பாசம் என்றாலே கயிறு என்று பொருள். எது நம்மைப் பிணிக்கிறதோ அது பாசம்) அடைய முடியாததான இவற்றுக்கு அப்பாற்பட்டதான ஞானத்தை எனக்கு உபதேசித்து அருள வேண்டும்.

பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காகப் போய் முட்டிக்

கிரி சாடி - பொற்பு: அழகு. ஆர்: நிறைந்த. பொன்பார்: பொன்னுலகம், அமராவதி, இந்திரலோகம். புத்தேளிர்: தேவர்கள். கிரி: மலை. சாடி: அழித்து.

அழகு நிறைந்த பொன்னுலகாகிய தேவலோகத்து தேவர்களுக்காகப் போர்க்களத்தில் புகுந்தும், அசுரர்களை அழித்தும், கிரெளஞ்ச மலையைத் தூளடித்தும்,

புக்கு ஆழிச்சூழ் கிட்டாகிச் சூர் பொட்டாகக் குத்திய வேலா...

புக்கு: புகுந்து. ஆழி: கடல். கிட்டாகி: அருகிலே (கிட்டும்படி) சென்று. சூர்: சூரபத்மன். பொட்டு ஆக:பொடியாக

போரின் சமயத்திலே உன்னிடமிருந்து தப்பிக் கடலுக்குள் புகுந்து மறைந்து கொண்டும், மாமரமாக வடிவெடுத்தும் நின்ற சூரபத்மனுக்கு அருகே சென்று, அவன் பொடியாகும்படி வேலால் குத்தியவனே,

முன் பாடப் பாடு அற்றாருக்கு ஒரு காலகட்டத்துக்கு முன்னாலே உன்னைப் பாட மாட்டேன் என்று மறுத்த (பாடு அற்றாருக்கு)

ஓர் முள் காடு அற்கப் பொருள் ஈவாய் - (அவர்) ஒரு முள் தைக்கும் காடு என்று பாடியபோது, அது அற்கு (பிழை) என்று சரியான பொருளை எடுத்துக் கொடுத்தவனே,

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே - முத்தா. முக்தனே, முத்தை ஒத்தவனே. முத்தீ (மூன்று வகையான அக்கினியால் செய்யும் வேள்விக்கு) அத்தா (தலைவனே), தூயவனே (சுத்தா) முத்தா (பற்றற்றவனே) முக்தியைத் தருபவனான பெருமாளே.

தேவர்களுக்காக போர் தொடுத்து, சூரனைக் கொன்று, மலையைத் தூளடித்தவனே, உன்னைப் பாடமாட்டேன் என்று பிடிவாதமாக நின்ற புலவனை, அவனுடைய பாடலில் பொருள் குற்றத்தைச் சுட்டிக் காட்டி ஆண்டுகொண்டவனே, நோயே நிறைந்த, வெறும் பஞ்சபூதச் சேர்க்கையாகிய இந்த உடலைச் சுமந்துகொண்டும், அது இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஓடிக்கொண்டும், அதையே சதா போற்றிக்கொண்டும்; இறைவனிடத்தில் அன்பு பூண்டவனைப்போல நடித்துக்கொண்டு இல்லறத்தில் பாய்ந்துகொண்டும் (‘இல்லறம் தாண்டிய’ அயல்வழியைக் கடைப்பிடித்துக்கொண்டு என்பது குறிப்பு) திரியும் வேடக்காரனான எனக்கு நீ, இந்தப் பாசங்களின் கட்டில் கிடக்கும் வரை கிடைக்காததான ஞானத்தை உபதேசித்து அருள வேண்டும்.

முட்டைப் புலவர் கிடைத்தாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com