பகுதி - 35

சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையுமான இன்று, இருபத்தைந்து திருவகுப்புகளில் இரண்டாவதான தேவேந்திர சங்க வகுப்பைப் பார்ப்போம், கேட்போம்.
Updated on
1 min read

சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையுமான இன்று, இருபத்தைந்து திருவகுப்புகளில் இரண்டாவதான தேவேந்திர சங்க வகுப்பைப் பார்ப்போம், கேட்போம். திருவகுப்புகளில் பிறவற்றிலும் அம்பிகையைப் பெரிதும் புகழ்ந்து சாக்தர்களையே விஞ்சுகிறார் என்றாலும், தேவேந்திர சங்கவகுப்பில், அம்பிகையை நாராயணியாகவே, நரசிம்மியாகவே பாடுகிறார். வேகமும் கனமும் உக்கிரமும் நிறைந்த பாடல் இது. கேட்கும்போதுதான் இதன் வேகம் தெரியும்.

மணிமந்திர ஔஷதத்தில் இது மந்திரம் போன்றது என்றும், ஸ்ரீவித்யாவில் மிகவும் சிறப்பான சாம்பவி முத்திரை இந்தப் பாடலில் அமைந்திருக்கிறது என்று;ம வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் கூறுவாராம். இங்கே காணவும்: http://kaumaram.com/vaguppu/vgp02.html

நீளமான பாடல். இன்று பாடலை மட்டும் பார்ப்போம். வழக்கம் போல இரண்டு வேகங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே படித்து மனனம் செய்ய விரும்புவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன
தானாந்தன தந்தன தானாந்தன தந்தன

தரணியி லரணிய முரணிர ணியனுடல்
தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில்
சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை

சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள்
சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை

தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள்
தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள
கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்

இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர்
எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில்

இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட
விடுமன கரதல
ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை

எழுதிய படமென இருளறு சுடரடி
யிணைதொழு மவுனிகள்
ஏகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி

கரணமு மரணமு மலமொடு முடல்படு
கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்

கனலெரி கணபண குணமணி யணிபணி
கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி
கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு

கரைபொழி திருமுக கருணையி லுலகெழு
கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்மவி தந்தவன்

அரணெடு மடமரை யடியொடு பொடிபட
அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கு மரன்குகன்

அறுமுக னொருபதொ டிருபுய னபிநவ
னழகிய குறமகள்
தார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன்

அடன்மிகு கடதட விகடித மதகளி
றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்

அதிபதி யெனவரு பொருதிறல் முருகனை
அருள்பட மொழிபவர்
ஆராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே.

பொருளை நாளைக்குக் காண்போம்.

</p><p align="JUSTIFY"><iframe src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/228794920&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" style="width: 400px; height: 268px" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com