பதச் சேதம் | சொற் பொருள் |
| பங்கமாகிய விட புயங்க மா படம் அது பறித்துச் சிவத்து அருந்திப் | பங்கம் ஆகிய: கெடுதியே வடிவெடுத்த; புயங்க: புஜங்க (தோளே உடல் என்று வடிவான) பாம்பு; சிவத்து: சினந்து, கோபித்து |
| பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி பச்சைக் கலாப மயிலைத் | பகிர் அண்டம்: அண்ட வெளிக்கு அப்பாற்பட்ட, வெளியிலுள்ள இன்னொரு அண்டம்; நிர்த்தம்: நடனம்; கலாபம்: தோகை |
| துங்கமாய் அன்புற்று வன்புற்று அடர்ந்துவரு துடரும் பிரேத பூதத் | துங்கமாய்: தூய்மையாய், பரிசுத்தமாய்; வன்புற்று: வலிமை வாய்ந்து; அடர்ந்து: நெருங்கி; துடரும்: தொடரும் |
| தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும் துண்டப் படக் கொத்துமாம் | பசாசு: பிசாசு; நிசாசரர்: (நிசியில் சஞ்சரிப்பவர்—இரவில் உலவுபவர்) அரக்கர்; அடங்கலும்: அனைவரும், மொத்தமும்; |
| மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி வஞ்சி நான்முகி வராகி | யாமளை: ஸ்யாமளா, பச்சை நிறத்தவள்; குமரி: கன்னி; மாலினி: மாலைகளை அணிந்தவள்; கௌரி: பொன் நிறமானவள்; நான்முகி: நான்கு முகங்களைக் கொண்டவள்; பிராமி |
| மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால் மகிழ அமுதுண்ட பாலன் | மலையரையன்: மலையரசன்; உதவும்: பெற்ற; திருமுலையில் ஒழுகுபால் மகிழ அமுதுண்டபாலன்: திருஞான சம்பந்தராக அவதரித்த முருகன்; |
| செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னு நரசிங்கமாய் இரணியன் உடல் | செங்கணன்: தாமரைக் கண்ணன், திருமால்; மதலை: தூண் (தூண் என்றும் பொருளுண்டு) |
| சிந்த உகிரில் கொடு பிளந்த மால்மருமகன் சேவல் திருத் துவசமே. | உகிரில்: நகத்தில்; கொடு: கொண்டு; மால்மருகன்: திருமாலின் மருமகன் |

பங்கமாகிய விட புயங்க மா படமது... கெடுதியே வடிவெடுத்த விஷம் கொண்டதாகிய பாம்பின் படத்தை,

பறித்து ...துண்டாகும்படிப் பறித்து,

சிவத்தருந்தி ... சினம் கொண்டு, அதைத் தின்று,

பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தமிடும்... புறஅண்டங்கள் முழுவதிலும் பறந்து திரித்து, நடனமாடுவதாகிய,

பச்சைக் கலாப மயிலை ... பச்சை வண்ணத் தோகையை உடையதாகிய மயிலோடு,

துங்கமாய் அன்புற்று ... பரிசுத்தமான அன்பைப் பூண்டுகொண்டு;

வன்புற்று அடர்ந்து வரும்... மிக்க வலிமையோடு நெருங்கி வந்து
... நெருங்கி வந்து (நம்மைத்),

துடரும் பிரேத பூத தொகுதிகள்.. தொடர்வன ஆகிய, பிணம், பூதங்களுடைய கூட்டங்களையும்;

பசாசுகள் ... பிசாசுகளையும்,

நிசாசரர் அடங்கலும் ... அரக்கர் கூட்டம் முழுமையையும்,

துண்டப் பட கொத்துமாம் ... துண்டங்களாகச் சிதறும்படிக் கொத்தும்

(அப்படிக் கொத்துவது எது என்று கேட்டால்)

மங்கை ... மங்கையாகவும்,

யாமளை ... யாமளை என்பதான பச்சைநிறமுடைய ச்யாமளையாகவும்,

குமரி ... குமாரியாகவும்,

கங்கை ... கங்கையாகவும் (விளங்குபவளும்);

மாலினி ... மாலைகளை அணிந்திருப்பவளாகவும்,

கவுரி ... கௌரி என்ற பொன்னிறத்தவளாகவும்;

வஞ்சி ... கொடி போன்றவளாகவும்,

நான்முகி ... நான்கு முகங்களை உடைய பிராமியாகவும்,

வராகி ... வராகியாகவும்,

மலை அரையன் உதவு அமலை ... மலையரசனாகிய இமவான் பெற்ற அப்பழுக்கற்றவளும் (பரிசுத்தமானவளும்) — ஆன உமையம்மையின்

திரு முலையில் ஒழுகு பால் ... திருமுலையிலிருந்து பெருகிய பால் அமுதத்தை,

மகிழ அமுதுண்ட பாலன் ... மகிழ்ச்சியோடு பருகிய திருஞானசம்பந்தராய் அவதரித்த பாலனாகிய முருகன்;

செங்கணண் ... சிவந்த கண்களை உடையதால் செங்கணான் என்றழைக்கப்படும் திருமால்,

மதலையிடம் இங்குளான் என்னும் ... இதோ இங்கே தூணில் இருக்கிறான் என்று (தன் தந்தையிடம் பிரகலாதன்) சுட்டிக்காட்டிய

நரசிங்கமாய் இரணியனுடல் ... நரசிம்மமாய் அவதரித்து இரணியகசிபுவின் உடலை,

சிந்த உகிரில் கொடு பிளந்த மால் மருமகன் ... (குருதி) சிந்தும்படியாக, நகங்களைக் கொண்டு பிளந்தவனான திருமாலுடைய மருமகனான முருகனுடைய

சேவல் திருத் துவசமே ... கொடியிலே விளங்குவதாகிய சேவலேதான் அதுவாகும்.

கொடுமையை விளைவிக்கின்ற விஷத்தைக் கொண்டதாகிய பாம்பின் பெரிய படத்தைக் கொண்ட தலையைப் பறித்துத் துண்டாக்கி, சினத்துடன் உண்டு, வெளியண்டங்கள் எங்கிலும் பறந்து திரிந்து வந்து நடஞ்செய்யும் பச்சைத் தோகையையுடைய மயிலிடம் தூய அன்பு கொண்டும்; வலிமையோடு (நம்மை) நெருங்கித் தொடர்ந்து வருகின்ற பிணப்பேய்களையும் மற்ற பிசாசுகளையும், துண்டங்களாகச் சிதறும்படிக் கொத்தும். அப்படி எது கொத்தும் என்று கேட்பீர்களானால்,

மங்கை, யாமளை, குமரி, கங்கை, மாலினி, கௌரி, வஞ்சி (கொடி), நான்முகி, வராகி, பர்வதராஜன் புதல்வி — என்றெல்லாம் அறியப்படும் உமையம்மையின் திருமார்பில் பெருகிய ஞானப்பாலை உண்டு களித்த (திருஞானசம்பந்தராய் அவதரித்த)வனும்;

செந்தாமரை போலக் கண்களைக் கொண்டவனும்; ‘இறைவன்தானே, இதோ இங்கேதான் இருக்கிறான்’ என்று தூணைச் சுட்டிக்காட்டிய பிரகலாதன் (காட்டிய தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டு) நரசிம்மமாய் வடிவெடுத்து, பிரகலாதனுடைய தந்தையான இரணியகசிபுவின் உடலை நகங்களைக் கொண்டு பிளந்தவரான மஹாவிஷ்ணுவின் மருமகனான,

முருகனுடைய கொடியில் விளங்குவதான சேவல்தான் அதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.