பகுதி - 325

பரமசிவனார் மெச்சும்படியாக அவருக்கு உபதேச மொழியை அருளிச் செய்த குருமூர்த்தியே!  இந்திரன் வளர்த்தவளும், இலக்குமியின் அம்சம்

பதச் சேதம்

சொற் பொருள்

நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி

நாசர்: கேடு செய்பவர்கள்; கடை: வாசல், வீடு, இருக்குமிடம்; விரவி: கலந்து;

ஞானமும் கெட அடைய வழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே

அடைய: முழுதுமாக; வழுவி: நெறி பிறழ்ந்து, விலகி, விழுந்து;

மா சகம் தொழும் உனது புகழில் ஒரு சொல் பகர்ந்து சுகம் மேவி

மா: சிறந்த; சகம்: உலகம்;

மா மணம் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ

வாசகம் புகல ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குரு நாதா

வாசகம்: உபதேச வாசகத்தை;

வாசவன் தரு திரு(வை) ஒரு தெய்வ ஆனைக்கு இரங்கும் மணவாளா

வாசவன்: இந்திரன்; திருவை: இலக்குமி(யை)—திருவை என்பதிலுள்ள ‘ஐ’ சாரியை;

கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும்

கீசகம்: மூங்கில்; சுரர்தரு: தேவதாரு (அல்லது) கற்பகத் தரு; மா: மாமரம்; அத்தி: அத்தி மரம்; சந்து: சந்தன மரம்;

கேசவன் பரவு குரு மலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே.

கேசவன்: திருமால்; பரவு: போற்றும்; குருமலை: சுவாமிமலை;

நாசர்தங் கடையதனில் ... கேட்டையே விளைவிப்பவர்களான (கடையர்களுடைய) இருப்பிடத்தை அடைந்து;

விரவிநான் மெத்த நொந்து ... (அவர்களோடு) சேர்ந்து, கலந்து அதனாலே மிகவும் நொந்துபோய்;

தடுமாறி ஞானமுங் கெட ... தடுமாற்றமடைந்து, நல்லறிவு கெட்டுப் போய்,

அடைய வழுவி ... தவறான வழியில் முழுமையாக விழுந்து;

ஆழத்து அழுந்தி மெலியாதே ... தீய நெறியில் ஆழமாக அழுந்திப்போய் நான் மெலிவை அடையாதபடி;

மாசகந் தொழுமுனது புகழின் ... சிறந்ததான இந்த உலகம் தொழுகின்ற உன்னுடைய புகழில்,

ஓர் சொற் பகர்ந்து சுகமேவி ... ஒரேயொரு சொல்லாவது எடுத்துப் பேசி அதனால் சுகநிலையை அடைந்து;

மாமணங் கமழுமிரு கமலபாதத்தை நின்று பணிவேனோ... சிறந்த மணம் வீசுவதான உன்னுடைய இரண்டு கமலப் பாதங்களையும் மனம் ஒன்றி வணங்கேனோ?  (வணங்க அருள வேண்டும்.)

வாசகம் புகல ஒரு பரமர்தாம் மெச்சுகின்ற குருநாதா.. நீ உபதேச மொழியைச் சொல்ல, (அதைக் கேட்ட) ஒப்பற்ற பரமசிவனார் மெச்சிப் புகழ்ந்த குருநாதா!

வாசவன் தருதிருவை ... இந்திரன் வளர்த்தவளும், லக்ஷ்மியின் அம்சமுமான,

ஒருதெய்வானைக்கு இரங்கு மணவாளா ... ஒப்பற்ற தேவானையிடம் மனம் கனிந்து மணம்புரிந்துகொண்டவனே!

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும் ... மூங்கிலும்; தேவதாருவும்; மகிழ மரமும்; மா மரமும்; அத்தி மரமும்; சந்தன மரமும் எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்திருக்கின்ற,

கேசவன் பரவுகுரு மலையில் யோகத்தமர்ந்த பெருமாளே... திருமால் போற்றுவதான சுவாமிமலையில், உபதேசிக்கிற கோலமான யோக நிலையில் அமர்ந்திருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

பரமசிவனார் மெச்சும்படியாக அவருக்கு உபதேச மொழியை அருளிச் செய்த குருமூர்த்தியே!  இந்திரன் வளர்த்தவளும், இலக்குமியின் அம்சம் கொண்டவளுமான தேவானையை மனம் கனிந்து மணமுடித்தவனே! மூங்கில், தேவதாரு, மகிழம், மா, அத்தி, சந்தன மரங்கள் எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்திருக்கின்றதும்; திருமால் போற்றுவதுமான சுவாமிமலையில் உபதேசிக்கு யோக நிலையில் அமர்ந்திருக்கின்ற பெருமாளே!

கேடுசெய்கின்ற கீழ்மக்களுடைய இல்லத்துக்குத் தேடிச் சென்று அவர்களோடு கலந்து பழகித் தடுமாற்றம் அடைந்து, புத்தி கெட்டு, தவறான வழிகளில் ஆழமாய் அழுந்தி நான் மெலிவடையாமல், உலகமே போற்றிப் பரவுவதான உன்னுடைய பெரும்புகழில் ஒரேயொரு வார்த்தையளவேனும் எடுத்துப் பேசுகின்ற நற்பணியில் ஈடுபட்டு, அதன் பயனாகச் சுகநிலையில் நின்று, உன் திருவடித் தாமரைகளில் மனம் ஒன்றிப் பணிகின்ற பேற்றைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com