பகுதி - 564

அற்பர்களைப் பாடித் திரியாமலிருக்க

அற்பர்களைப் பாடித் திரியாமலிருக்கக் கோரும் இப்பாடல் கதிர்காமத்துக்கானது.  இந்தப் பாடலில் ‘அலகின்மாறு’ என்று சொல்லப்படுவதற்கு ‘விளக்குமாறு’ என்று பொருள். 

அடிக்கு ஒற்றொழித்து முப்பது எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் இரண்டெழுத்துகளை உடையவை; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் இரண்டு நெடில்களோடு தொடங்கும் மூன்றெழுத்துகளைக் கொண்டவை. 

தனன தான தானான தனன தான தானான
      தனன தான தானான                தனதான

அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
         அடைவில் ஞாளி கோமாளி      அறமீயா
      அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
         அருளி லாத தோடோய          மருளாகிப்
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
         பருவ மேக மேதாரு              வெனயாதும்
      பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
         பரிசில் தேடி மாயாத             படிபாராய்
இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி
         லெறியும் வேலை மாறாத       திறல்வீரா
      இமய மாது பாகீர திநதி பால காசார
         லிறைவி கான மால்வேடர்       சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
         கதிர காம மூதூரி                லிளையோனே
      கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
         கருணை மேரு வேதேவர்        பெருமாளே.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com