பகுதி - 800

பிறவிப் பிணி நீங்க வேண்டும்....
பகுதி - 800


பிறவிப் பிணி நீங்க வேண்டும் என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் இரண்டு நெட்டெழுத்துகளையும் ஒரு குற்றெழுத்தையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, ஒரு குறில் என இரண்டு எழுத்துகளையும் கொண்டுள்ளன.


தானான தாத்த தானான தாத்த

                தானான தாத்த     தனதான


தீயூதை தாத்ரி பானீய மேற்ற

                        வானீதி யாற்றி     கழுமாசைக்       

      சேறூறு தோற்பை யானாக நோக்கு       

                        மாமாயை தீர்க்க     அறியாதே       

பேய்பூத மூத்த பாறோரி காக்கை       

                        பீறாஇ ழாத்தி னுடல்    பேணிப் 

      பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை       

                        போமாறு பேர்த்து     னடிதாராய்       

வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி       

                        லேய்வாளை வேட்க     வுருமாறி             

      மீளாது வேட்கை மீதூர வாய்த்த       

                        வேலோடு வேய்த்த     இளையோனே

மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்        

                        மாமேரு வேர்ப்ப     றியமோதி   

      மாறான மாக்கள் நீறாக வோட்டி       

                        வானாடு காத்த     பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com